ஏழாவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் இன்று ஆரம்பம்!

Date:

ஏழாவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (17 ) ஆரம்பமாகின்றது.

இத் தொடர் இன்று முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது.

உலகக் கிண்ண T20 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் தகுதிச் சுற்றுப் சுற்றுப் போட்டிகள் முதலில் நடைபெறும்.அதற்காக ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மைதானங்கள் தயார் நிலையில் உள்ளது.

முதலாவது போட்டியில் பப்புவா நியுகினியா மற்றும் ஓமான் அணியும் மோதவுள்ளன.இன்று பிற்பகல் 3.30 ற்கு (இலங்கை நேரம்) ஆரம்பமாகவுள்ளது.இரண்டாவது போட்டியாக பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன .இன்று இரவு 7.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பிக்கப்படும்.(இலங்கை நேரம்)

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிச் சுற்றில் 4 அணிகள் வீதம் இரண்டு குழுக்களாக போட்டிகள் இடம்பெறும்.

A குழுவில் – இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

B குழுவில் – பங்களாதேஷ், ஓமான், ஸ்கொட்லாந்து, பப்புவா நியுகினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.T20 உலகக் கிண்ணத் தொடரின் பிரதான சுற்று எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெற உள்ளது. இப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதோடு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.இதனை பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாக அமைந்துள்ளது.

இதனிடையே இத் தொடரிற்கான ஜெர்ஸியை உரிய அணிகள் அறிமுகப்படுத்தியுள்ளது.கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பமான T20 உலகக் க் கிண்ணத்தை முதன் முறையாக இந்தியா வென்றது.இரண்டாவதாக

2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணியும், 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் 2012 ,2016 ஆண்டுகள், 2014 ஆம் ஆண்டு இலங்கையும் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது.

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகளின் இடைவெளிக்கு பின்னர் இன்று T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.தகுதி காண் சுற்றுப் போட்டிகள் இன்று முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...