ஓமானிலிருந்து மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நன்கொடை!

Date:

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஓமான் சுல்தானேற்றில் உள்ள இலங்கை சமூகம் வழங்கியுள்ளது. மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த நன்கொடைக்கு இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பு, வங்கியாளர்கள் மற்றும் ஓமானில் உள்ள ஏனைய தொழில் வல்லுநர்கள் பங்களித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை வழங்கப்பட்டது. உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கையளித்தார்.

ஓமானில் உள்ள இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் தூதரக ஊழியர்கள் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...