எனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் விசேட அறிக்கை

Date:

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அல்ஹாஜ் ரிசார்ட் பதியுதீன் அவர்கள் நேற்று பிணையில் விடுதலையானதை தொடர்ந்து அவர் தன்னுடைய முகநூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்.

இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே…!

என்னை அநியாயமாக சிறையில் அடைத்த நாள் முதல், எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற, பிரார்த்தித்த தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்கள் அனைவரது பிரார்த்தனைகளும் வீண்போகவில்லை என்பது, எனது திடமான நம்பிக்கையாகும்.

எனது விடுதலைக்காக குரல் கொடுத்த சகோதர கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எனது விடுதலைக்காக செயற்பட்ட சட்டத்தரணிகள், சர்வதேச அரங்குகளில் செயற்பட்டவர்கள், ஊடக தர்மத்தை பேணி மனச்சாட்சிப்படி செயற்பட்ட ஊடகவியலாளர்கள். இன, மத, கட்சி வேறுபாடுகள் கடந்து செயற்பட்டவர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.

எனது விடுவிப்பு என்பது முடிவல்ல…

சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களாக நமது உடன்பிறப்புக்கள் பலர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அநியாயமாக தடுப்புக்காவலிலும், சிறையிலும் இருக்கின்றனர். அவர்களது விடுதலைக்காகவும் நாம் எல்லோரும் தொடர்ந்தும் பிரார்த்திப்போமாக…

உங்களது நம்பிக்கையையும் அமானிதத்தையும் காப்பாற்றும் வகையில், இன் ஷா அல்லாஹ், எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும். நான் நேசிக்கும் மக்கள் பணி தொடரும்!

ரிஷாட் பதியுதீன்,
தலைவர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
பாராளுமன்ற உறுப்பினர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...