அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசமடைந்துள்ளது.
கடந்த திங்கள் பகல் அலிசால் நீர்த்தேக்கத்தின் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவியது.இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.