கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரான் நாட்டு சந்தேகநபர்கள், கைகளை கழுவும் திரவத்தை அருந்தி உயிரிழந்திருந்தனர்.
இதன் காரணமாக,கைதிகளின் பயன்பாட்டிற்காக கைகளை சுத்திகரிக்கும் திரவத்தை வழங்காது, சவட்காரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், கைதிகளுக்கு கைகளை கழுவும் திரவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.