திருமண நிகழ்வுகளுக்கான சுகாதார வழிகாட்டல்கள் நேற்று வெளியிடப்பட்டது.அதனடிப்படையில் இன்று (16) முதல் மண்டபங்களில் 25% மக்களை உள்ளடக்கியதாக 50பேரைக் கொண்ட திருமண நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மரண சடங்குகளின் போது 15 பேருக்கு பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விசேட கலந்துரையாடல்களுக்கு 50 பேர் என அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.