தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.
கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணு தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று (22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ தளபதி ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை இந் நோய் பரவலில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் கடமையாகும் என்பது நினைவூட்டப்பட வேண்டும்.