கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் மரணம்

Date:

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (03) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 02 உயிரிழந்தவர்களில் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 10 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 14 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 31 பேர் ஒக்டோபர் 03 உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...