சந்தையில் மீண்டும் சீமெந்து தட்டுப்பாடு!

Date:

சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு கடந்த சில வாரங்களாக நிலவி வருகின்றது.எனவே சந்தையில் மீண்டும் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படுமென சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் விலையை இரண்டு நாட்களில் நிறுத்த முடியாது , எப்படியும் இரண்டு மாதங்களாவது செல்லும் எனவும் சீமெந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் டொலர் பிரச்சினையாகும்.இதனால் சிறுவிலை அதிகரிப்பு ஏற்படக் கூடும் என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் இராஜாங்க லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சீமெந்து மூடையொன்றின் விலை 93 ரூபாவல் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மூடை சீமெந்து 1,098 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.எவ்வாறாயினும் உரிய முறையில் சீமெந்து கிடைப்பதில்லையெனவும் அவ்வாறு கிடைக்கும் சீமெந்து பல்வேறு விலைகளின் கீழ் கிடைப்பதாகவும் விற்பனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.10 சீமெந்து மூட்டைகள் கிடைத்தால் அவை 10 நிமிடங்களில் முடிந்து விடுகின்றன.

இதன் காரணமாக நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் சீமெந்து கல் , பூந்தொட்டி மற்றும் பூங்கா அலங்கார பொருட்கள் உற்பத்தியாளர்கள் வருமான வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு சீமெந்தை பெற்றுக் கொடுக்க இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...