பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவரை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும் இராணுவத்திற்குமிடையே கருத்து முரண்பாடுகள் தோன்றியதை தொடர்ந்து நாட்டில் முன்மாதிரியான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.
இந்த முரண்பாட்டை தணிக்கும் வகையில் இராணுவ ஜெனரல் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் பிரதமர் இம்ரான் கான் பதவி உயர்வு வழங்கியுள்ளார்.ஐ.எஸ்.ஐ தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்த நிலையில், அவரின் பதவிக்காலம் முடிந்ததால், நதீம் அகமது என்பவர் தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்திருந்தது
இருப்பினும் நதீம் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தடுத்து வைத்தது இதனால் இம்ரான் – இராணுவ தளபதி கமர் ஜாவேதுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் பதவி உயர்வு போன்ற அறிவிப்புகளை இம்ரான் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.