சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பீ.எம் ஹம்ஸாவா அவர்களை கெளரவிக்கும் வகையில் கொழும்பு டைம்ஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்துபாரம் கடந்த சனிக்கிழமை கொழும்பு மென்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.
இவ் வைபவத்தில் பங்களாதேஷுக்கான தூதுவர் தாரிக் எம்.டி ஆரிபுல் இஸ்லாம் மற்றும் துருக்கிய தூதுவர் R. Demet Şekercioğlu ஆகியோர் கலந்துகொண்டனர்.அத்தோடு இலங்கைக்கான
சவூதி தூதர் அப்துல்நாசர் அல்-ஹார்த்தி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் புதிய தூதுவர் ஹம்சாவிற்கான வாழ்த்துக்களை அப்போது தெரிவித்தனர்.
புதிய தூதுவரை கெளரவிப்பதற்காக ஊடகவியலாளர்கள், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கொழும்பு வர்த்தக சமூகத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.