சிறுவர்களின் உரிமையை பாதுகாப்பது அனைவரினதும். காட்டாய கடமை – பிரதமரின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி!

Date:

சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சர்வதேச சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதனைத் துரிதகதியில் நிறைவுசெய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனப் பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்காலத்தில் இடம்பெறுகின்ற சிறுவர் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் குழந்தைகளை அறிவுறுத்தும் செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நாடுபூராகவும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.அதன் மூலம் சிறுவர் வன்கொடுமையினையும் சிறுவர் துஷ்பிரயோகத்தினையும் இயன்றளவு குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...