குற்றவியல் வழக்குகள் போன்ற விசாரணைகளின் போது சிறுவர்களை சாட்சியாளர்களாக நீதிமன்றத்திற்கு அழைப்பதை தடுக்கும் சட்டத்தையடுத்து, காணொளி தொழில்நுட்பம் மூலம் சிறுவர்களிடம் தகவல்ளைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் இன்று (01) திறந்து வைக்கப்படவுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் சிறுவர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளின்போது நபர்களின் சாட்சியங்களை விடவும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.