சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!

Date:

புகையிரதம், பேருந்துகள் போன்ற பொது இடங்களிலும், நகர போக்குவரத்து நெரிசல்களிலும் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் குழந்தைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம் என இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்´ என்ற 2021 உலக சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வளாகத்தில் நேற்று (5) நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த த சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

தெரு குழந்தைகளை கையாள்வதற்கு நீதி அமைச்சகத்துடன் கூட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸ் உதவியுடன் மிக குறுகிய காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வு உலக சிறுவர்கள் தின நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இருந்தது. சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த தேசிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்துதல், NCPA website (mobile friendly) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த இணையதளம் ஆங்கிலத்திலும் தொடங்கப்பட்டது.

வெளிப்புறமாக அடையாளம் காணக்கூடிய குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டி நூல் வெளியீடு, Child fund and the Payment gateway, சார பெய – சம்பவ கல்வி சஞ்சிகை வழிக்காட்டி தொடரினை வெளியீடுதல், சார பெய- சம்பவ கல்வி உளவியல் சமூகவியல் நிகழ்நிலை சான்றிதழ் திட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு குறித்த வீடியோ விளையாட்டுகள் ஆரம்பிப்பது ஆகிய வேலைத்திட்டங்கள் பல அமைச்சரின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...