சூடானில் இராணுவ ஆட்சியை கண்டித்து தலைநகர் கார்தோம் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கின் அமைச்சரவை கலைக்கப்பட்டு இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஜனநாயக முறையிலான ஆட்சியை வலியுறுத்தி திரண்ட மக்கள் வீதியில் நின்று பதாகைகளை ஏந்தி சூடான் கொடியை பறக்க விட்டனர்.
போராட்டத்தை கலைக்க இராணுவ வீரர்கள் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 38 பேர் படுகாயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.