தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு குறித்து பாராளுமன்ற பேரவையின் தீர்மானம்!

Date:

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவியில் தற்பொழுது காணப்படும் வெற்றிடம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வெற்றிடங்களுக்கு சிபாரிசுகளைக் கோருவற்கு பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய சட்டத்தரணிகள் சங்கம், பதிப்பாளர்கள் சங்கம், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து சிபாரிசுகளைக் கோருவதற்கு பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஒன்லைன் முறையில் நடைபெற்ற பாராளுமன்றப் பேரவைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிபாரிசுகளைக் கோருவது தொடர்பில் வாராந்த மற்றும் நாளாந்த பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரங்களைப் பிரசுரிப்பதற்கும், சிபாரிசுகளை மேற்கொள்ள இரண்டு வார கால அவசாகத்தை வழங்குவதற்கும் பாராளுமன்றப் பேரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...