கொவிட் தொற்று நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிறுவனத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் சவீந்திர கமகே குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கைப்பேசி மூலம் 225 என்ற இலக்கத்திற்கு அல்லது நிலையான தொலைப்பேசி மூலம் 1225 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ntmi.lk என்ற இணையத் தளத்திற்கு பிரவேசித்து நேரம், திகதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.