நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி பள்ளிவாசல்களில் சமய நிகழ்ச்சிகளுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

Date:

2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் தொடர்பான சமய நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதார வழி முறைகளின் கீழ் 50 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அனுமதியை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்கள் இன்று 15 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் முஸ்லிம் விவகாரங்களுக்கு இணைப்பாளராக இருக்கின்ற அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி அவர்களின் வேண்டுகோளின் பெயரில் குறித்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒழுங்குகளைப் பேணிக் கொள்ளுமாறும், இது தொடர்பான மேலதிக விபரங்களை இலங்கை வகுப் சபை வெளியிட உள்ளதாகவும் கலாநிதி ஹசன் மௌலானா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...