நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் ( 26) உயிரிழந்துள்ளவர்கள் ஆகும். இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில்மேலும் 425 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.