நிர்வாகத்துறை மற்றும் அரச சேவையிலும் நீண்ட கால அனுபவம் பெற்ற மூத்த அதிகாரி அன்ஸார் முஸ்லிம் விவகார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவி ஏற்றார்!

Date:

இலங்கை அரச சேவையின் மூத்த நிர்வாக அதிகாரியும் ,பல தூதரகங்களின் தூதுவராக கடமையாற்றிய திரு. இப்றாஹிம் அன்ஸார் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீடீர் இடமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் விவகார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஏ.பி அஷ்ரப் உடைய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக இன்று பிற்பகல் திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

நிர்வாகத் துறையில் நீண்ட முதிர்ச்சியும் ,அனுபவமும் கொண்டவரும் , பல்வேறு நாடுகளில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றி இலங்கைக்கு நற்பெயரை பெற்றுத் தந்தவரும் , வெளிநாட்டு சேவையில் ஒரு மூத்த அதிகாரியுமாவார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டதுடன் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹசன் மௌலானா, திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...