நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு மாவனல்லை ஸாஹிராவில் இரத்தான முகாம்

Date:

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இரத்தான நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் ஏ.எம் நவ்ஷாட் தலைமை தாங்கினார்.

குறித்த நிகழ்வின் ஆரம்ப நிகழ்வுக்கு கல்லூரியின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், துறைசார் நிபுணர்கள், ஊர் மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

‘வாழ்வின் வரத்தை பகிர்ந்து கொள்வோம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இரத்தான நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மாவனல்லை ஸாஹிரா கல்லூரியின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ரஸா மல்ஹர்தீன்

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...