பல விருதுகளுக்கு பெயர் பெற்ற பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் ஜுனைதா சரீப் காலமானார்!

Date:

காத்தான்குடிக்கு பெருமை சேர்த்த பிரபல எழுத்தாளர், நாவலாசிரியர் ஜுனைதா சரீப் இன்று (03) காலை இறையடி எய்தினார்.

அவரின் கலை இலக்கிய படைப்புக்கள் தனித்துவ வரலாற்றை உருவாக்கியுள்ளது.

இவர் இதுவரை அரச தேசிய இலக்கிய விருதுகள் மூன்றைப் பெற்று சாதனையும் படைத்துள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த ஜுனைதா ஷரீப் அவர்களுக்கு தற்போது 80 வயதையும் தாண்டியுள்ளது.
இவருடைய எழுத்தாற்றலும் இலக்கியப் பணியும் முழுத்தேசமே பெருமையுடன் பார்க்க வைத்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான அரச தேசிய இலக்கிய விருது விழாவில் இவர் எழுதிய “கனவுலகம்” என்ற சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருதாக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டு வானொலி நாடகத் தொகுப்புக்கான தேசிய இலக்கிய விருதையும் 2006ம் ஆண்டு நாவலுக்கான தேசிய இலக்கிய விருதையும் இவர் தேசிய ரீதியாக பெற்று சாதனை படைத்தார்.

இதே போன்று இவர் 2006ம் ஜனநாயகர்கள் எனும் நூலுக்காக வடக்கு கிழக்கு மாகாண விருதைப் பெற்றதுடன் இதே ஆண்டில் பெரியமரைக்கார் சின்னமரைக்கார் என்ற நூலுக்கான விருதையும் மாகாண விருதாக பெற்றார்.

2016ம் ஆண்டு கிழக்கு மாகாண சபையினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண சபையின் இலக்கிய விழாவில் சீதக்காதினி என்ற நூலுக்கான விருதையும் பெற்றுக் கொண்டார்.
இவர் எழுதிய சூனியத்தை நோக்கி எனும் நாவல் சர்வதேச விருதையும் பெற்றுக் கொடுத்தது.

2019ம் ஆண்டு தமிழ் நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில்; நடைபெற்ற வைபவத்தின் போது இவருக்கு கரிகாலற் சோழன் எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது அத்துடன்
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலக்கிய ஜாம்புவான்கள் கலந்து கொண்ட முஸ்தபா அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த சர்வதேச இலக்கியப் பெரு விழாவில் இவருக்கு இந்த சிறப்புப் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இவர் ஒரு எழுத்தாளர் இலக்கிய வாதி மாத்திரமல்ல ஒரு சிறந்த நிருவாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

இவற்றைத் தவிர இக்பால் தின விருது, தமிழியல் விருது என பல இலக்கியனர் விருதுகளைப் பெற்றுள்ள ஜுனைதா ஷரீப் தனது கல்வியை காத்தான்குடி முதலாம் குறிச்சி அந் நாசர் வித்தியாலயத்தில் கற்றுள்ளார்.

1975ம் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த இவர் கிழக்கு மாகாணத்தின் முதல் முஸ்லிம் நிருவாக சேவை அதிகாரி தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 1975ம் ஆண்டு அட்டாளைச்சேனையின் பிரிவுக்காரியதரிசியாகவும் பின்னர் பிரிவு உதவி அரசாங்க அதிபராகவும் 1977ம் ஆண்டு வீசிய சூறாவளிக்குப் பின்னர் தலைமையக உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றிய இவர் 1990ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் ,
1992ம் ஆண்டு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியதுடன் 1994ம் ஆண்டு புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிக பொது முகாமையாளராகவும்,
இனவிவகார தேசிய நல்லிணக்க அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமை புரிந்துள்ளதோடு,
அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் வாழ்விட நகர முகாமையாளராகவும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவின் இணைப்பாளராகவும் செயலாற்றியுள்ள இவர் 1996ம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தல் பட்டப்பின் டிப்ளோமா எனும் முகாமைத்துவக் கற்கைநெறியை பூர்த்தி செய்துள்ளார்.

1967ம் ஆண்டிலிருந்து தனது மனைவியின் பெயரைத்தாங்கி ஜுனைதா ஷெரீப் என்ற புனைப் பெயருடன் எழுதத் தொடங்கிய இவர் 80 வயதைக் கடந்தும் மனைவி வபாத்தாகிய பின்னரும் எழுதி வந்தார்.

13 நாவல்களையும் பல சிறுகதைகளையம் வாணொலி நாடகங்களையும் எழுதி கூடுலான இலக்கிய விருதுகளைப் பெற்ற ஒருவராகவும்.
கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான இலக்கிய விருதுகளைப் பெற்ற ஒருவராக இவர் திகழ்கிறார் அத்தோடு
பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆய்வுகளுக்காக இவரைத் தேடிச் சென்று இவர் எழுதிய நூல்களை வாங்கிப் படித்துச் செல்கின்றனர்.
அன்பான பண்பான பெருமை இல்லாத ஒரு இலக்கிய ஜாம்புவான் இவர் திகழ்ந்தார்.
இன்றைய வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இலக்கிய வாதிகளுக்கெல்லாம் உதாரணப்புருசராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய மறைவுக்கு Newsnow இன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...