பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று (10)உயிரிழந்துள்ளார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று(10) காலை அவருடைய 85 வது வயதில் மரணம் அடைந்துள்ளார்.நேற்றிரவு உடல் நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது. எனினும், நுரையீரல் செயலிழப்பால் இன்று காலை 7 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் பர்வேஷ் கட்டாக் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
‘டாக்டர் அப்துல் காதிர் கானின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டுக்கு (பாகிஸ்தான்) பெரும் இழப்பு; தேசத்துக்கான அவரது சேவைகளை பாகிஸ்தான் என்றென்றும் கெளரவிக்கும். பாகிஸ்தானின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. அதற்காக நாடு என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் பர்வேஷ் கட்டாக் டுவிட்டரில் உருது மொழியில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த டாக்டர் அப்துல் காதிர் கான், பாகிஸ்தான் நட்டின் அணுசக்தி திட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.