பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது , சுகாதார பழக்கவழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் விளக்கமளிக்க வேண்டும் என சுகாதாரத் துறை வேண்டியுள்ளது.
மாணவர்கள் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு தாய்,தந்தை ஆகிய இருவருக்கும் உள்ளது எனவே முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றை கடைபிடிக்கவும், உணவைப் பகிர்ந்து உண்பதைத் தவிர்க்கவும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று விசேட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை குடும்ப நல வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன இதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.