புகையிரத பயணிகளுக்கான பயணச்சீட்டு வழங்குவதற்கான கோரிக்கையை நாளை (29) இடம்பெறவுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கான அனுமதியை எதிர்பார்ப்பதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகளுக்கு அனுமதியை பெற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் புகையிரத பருவகால சீட்டை வைத்திருப்பவர்கள் மாத்திரம் புகையிரதத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.அதை மாற்றும் அதிகாரம் கொவிட் கட்டுப்பாட்டுக் குழுவிற்கே உள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.