புதிய சுகாதார வழிகாட்டல்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி!

Date:

நாட்டின் அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களிலும் விசேட பூஜைகளை நடாத்திச் செல்ல புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் பௌத்தர்கள் பௌர்னமி நாட்களில் மற்றும் போதி பூஜையின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டில் ஈடுபட முடியும். அத்தோடு கத்தோலிக்க, இஸ்லாம் மற்றும் இந்து பக்தர்கள் விசேட மத வழிபாடுகளின் போது 50 பேரின் பங்குபற்றலுடன் கலந்து கொள்ள முடியும்.

குறித்த வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் சுகாதார பாதுகாப்பு மற்றும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை மீறாது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேவேளை, சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் குறித்து தேவைப்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

திருமணம் மற்றும் ஏனைய விருந்துகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லையெனவும் கொவிட் தொற்று பரவல் இன்னும் முடியவில்லை என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...