ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய தலிபான் அமைப்பின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாடா முதன் முறையாக பொது வெளியில் தோன்றியதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவராக அகுந்த்சாடா இருக்கின்ற நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.இதனால் அவர் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவியது.இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சனிக்கிழமை தாருல் உலூம் ஹக்கிமா மத்ரஸாவில் தாலிபான்கள் முன் அகுந்த்சா உரையாற்றியுள்ளார்.