மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியவே குசலதம்ம தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் இன்று ( 30) களனிய வித்யாலங்கார பிரிவினவில் கலந்து கொண்டனர்.
இறுதி அஞ்சலியை முன்னிட்டு களனிய வித்தியாலங்கார பிரிவெனாவில் வைக்கப்பட்டிருந்த மஹா நாயக்க தேரரின் மறைவு தொடர்பான அனுதாப புத்தகத்தில் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி உள்ளிட்ட அனைத்து மத பிரமுகர்களும் தங்களுடைய அனுதாபங்களை பதிவு செய்தனர்.பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பதிகாரியான ஹஸன் மெளலானா அவர்கள் இந்த அனுதாப புத்தகத்தில் முஸ்லிம் சமூகம் சார்பான அனுதாபத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.