மீலாத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது!

Date:

மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந் நிகழ்வை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய மீலாதுன் நபி தின விழாவை முன்னிட்டு நினைவு முத்திரையும், முதல் நாள் உறையும் கௌரவ பிரதமர் தலைமையில் இச் சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது.

வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்கள் குறித்த நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறையை கௌரவ பிரதமருக்கு வழங்கினார்.

முஹம்மது நபி ஸல் அவர்களது பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் பரிசில்களும் சான்றிதழ்களும் ,
நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள் இதன்போது கௌரவ பிரதமருக்கு நினைவு பரிசொன்றை வழங்கிவைத்தார்.

குறித்த நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நீதி அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி, தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விகரமநாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மர்ஜான் ஃபலீல், எச்.எச்.எம்.ஹாரிஸ், இஷான் ரஹுமான், நஸீர் அஹமட், அலி சப்ரி ரஹீம் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ விஜேவீர, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஊடக பிரிவு

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...