முன் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை

Date:

இம்மாத இறுதிக்குள் முன் பள்ளிகளைத் திறப்பதே தமது இலக்கு என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து படிப்படியாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

அதனடிப்படையில் கட்டம் கட்டமாகப் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன் ஒரு அங்கமாக முன் பள்ளிகளைத் திறக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...