நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் 11 ஆண்களும் , 07 பெண்களும் அடங்குவதாகவும் அரச தகவல் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொவிட் தொற்று உறுதியான மேலும் 442 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 533,208 ஆக உயர்ந்துள்ளது.இவர்களில் 25,991 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை கொவிட் தொற்றிலிருந்து மேலும் 360 பேர் குணமடைந்துள்ளனர்.அதன்படி நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 493,674 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.