மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) அவர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.
மார்ச் 9 ம் திகதி அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாகவே மார்ச் மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.