மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (31) இடம்பெறவுள்ளன.கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந் நிகழ்வு மதியம் 1.30 க்கு அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளது.
பேலியகொடை வித்தியாலங்கார மஹா பிரிவேனாலிருந்து அவரின் பூத உடலை ஏந்திய வாகனம் மதியம் 12.30 க்கு புறப்படவுள்ளது.வாகன பேரணியின் போது வீதியில் நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனம் கண்டி வீதி , களனி பாலம், பேஸ்லைன் வீதி, பண்டாரநாயக்கா சந்தி, ஊர்கொடவத்த சந்தி, இக்கிராமம் சந்தி, தெமடகொடை சந்தி, பண்டாரநாயக்கா சந்தி, பொரளை சந்தி, டி.எஸ் சேனாநாயக்க சந்தி, ஹோர்டன் விஜேராம சந்தி, ஹோர்டன் சுற்று வட்டம், நந்தா மோடர்ஸ் சந்தி, சுதந்திர சுற்று வட்டம் மற்றும் சுதந்திர மாவத்தை ஊடாக வந்தடையவுள்ளது.