எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 18 – 19 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு பைஷர் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்க தடுப்பூசிகள் குறித்த தொழில்நுட்பக் குழு முடிவு செய்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தலைமையில் கூடிய தொழில்நுட்பக் குழு, தடுப்பூசியை சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் வழங்க முடிவு செய்துள்ளது.
இதுவரை உள்ளார்ந்த மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உள்ள சிறுவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.