2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் இருவருக்கு

Date:

2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளததாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராடோவ் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரியா ரெஸ்ஸா (அமெரிக்க பத்திரிகையாளர்), டிமிட்ரி முராடோவ் (ரஷிய பத்திரிகையாளர்) ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...