நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 95 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளதாக !தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) முற்பகல் காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கொவிட் தடுப்பு விசேட குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், 20 முதல் 30 வயதுக்கு இடையப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கும் மற்றும் 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக போடப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பு ஒன்றை நடத்த கொவிட் தடுப்பு குழு தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.