60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

Date:

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது.
விசேடமாக சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு மூன்றாவதாக பைஸர் அல்லது மொடர்னா தடுப்பூசியை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
சினோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகள் செயலி ழந்த வைரஸைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுவதுடன், பைஸர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வைரஸ் குரோமோசோம்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு குரோமோசோம் தடுப்பூசியொன்றைச் செலுத்துவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர் களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் டெல்டா திரிபு தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்ப டுவதால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...