IPL 2021 – இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி!

Date:

டெல்லி கெபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட டெல்லி அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டெல்லி அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பிரிதிவ் ஷா 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சிம்ரொன் ஹெட்மயர் 37 ஓட்டங்களையும், ரிஷப் பான்ட் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சென்னை அணி சார்பில் ருதுராஜ் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதேபோல்,ரொபின் உத்தப்பா 60 ஓட்டங்களையும் அணித்தலைவர் மகேந்திர சிங் தோணி ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டொம் கரன் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்

Popular

More like this
Related

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...