IPL தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. அதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4 வெற்றி ,7 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனிவரும் அனைத்து போட்டிகளும் பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன.இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பு IPL தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி, கரீபியன் பிரிமியர் லீக் தொடர், IPL தொடரில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்குள் (பயோ-பபுள்) இருந்துள்ளதால் மனரீதியில் புத்துணர்வு பெறமுடிவு செய்துள்ளதாகவும் , T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த உள்ளதாகவும், இதனால், நடப்பு IPL தொடரில் இருந்து விலகுவதாகவும் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.