கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த அமுலில் இருந்த இரவு 11.00 மணியிலிருந்து அதிகாலை 4.00 மணி வரையான பயணத்தடை இன்று (25) நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை நீக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் அமுலிலுள்ளதாகவும் தொற்று நிலைமையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.