தற்போது அமுலில் இருக்கும் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
காணொளி தொழில்நுட்பத்தினூடாக இன்று ( 29) இடம்பெற்ற கொவிட் தொற்று ஒழிப்பு செயலணி கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது