T20 Highlights: பங்களாதேஷுடனான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

ஐ.சி‌.சி இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” சுற்றின் குழு 1 இற்கான நேற்றைய (27)  போட்டியாக பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இதில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 29 ஓட்டங்களையும் ,மஹ்முதுல்லாஹ் 19 ,நஷும் அஹ்மத் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்கள்.

125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்கள் நிறைவில் 126 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ரோய் 60 ஓட்டங்களையும் , டேவிட் மாலன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பட்லர் 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.பந்து வீச்சில் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்த தோல்வியுடன் பங்களாதேஷ் அட்டவணையில் மேலும் கீழ் தள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...