ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 26 வது போட்டியாக இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் பின்ச் 44 ,வேட் 18, அகார் 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.ஏனைய வீரர்கள் பெரிதளவில் பிரகாசிக்க தவறிவிட்டார்கள்.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் கிரிஸ் வோக்ஸ் 2 , கிரிஸ் ஜோர்டன் 3, மில்ஸ் 2, ஆதில் ரசீத் மற்றும் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
126 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 11.4 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பட்லர் 71 , ஜெஸன் ரோய் 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் அஸ்டன் அகார் மற்றும் அடம் ஸம்பா தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.