ஐ.சி.சி உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 28 ஆவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ராகுல் 18,இசான் 4, ரோகித் 14, கோலி 9, பான்ட் 12, ஹார்திக் 23, ஜடேஜா 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் அபாரமாக பந்து வீசிய போல்ட் 3(20) விக்கெட்டுகளையும், ஸொவ்தி 1 ( 26) , மய்ல்ன் 1(30), ஸோதி 2 ( 17) விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
111 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மிச்சல் 49(35) , கேன் வில்லியம்சன் 33(31) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சில் பும்ராஹ் 2 ( 19) விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளதுடன் அரையிறுதி வாய்ப்பை பெருமளவில் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.