ஐ.சி .சி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின், “சூப்பர் 12” சுற்றின் குழு 1 க்கான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.அதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சமிக கருணாரத்ன, பினுர பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
பங்களாதேஷ் அணி சார்ப்பில் மொஹமட் நயீம் 62 ஓட்டங்களையும் முஷ்பீகுர் ரஹீம் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.172 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெறறுக் கொணடார்.பாணுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் சகிப் ஹல் ஹசன் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.