ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 27 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதின.இன்றைய போட்டி அபுதாபியில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
161 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஹஸரதுல்லாஹ் செசாய் 33, முஹம்மத் சதாட் 45, அஸ்கர் ஆப்கான் 31, முஹம்மத் நபி 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
நமீபியா அணியின் பந்து வீச்சில் ரூபன் மற்றும் லொப்டி தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்மிட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
நமீபியா அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வய்ஸஸ் 26 , ஜேன் நிகல் 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஹமீத் ஹஸன் மற்றும் நவீன் உல் ஹக் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.