T20 Highlights: 60 ஓட்டங்களுக்கு சுருண்டது ஸ்கொட்லாந்து; ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் ” சூப்பர் 12″ சுற்றின் குழு இரண்டிற்கான போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின .இப் போட்டியில் 130 ஓட்டங்களால் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி அடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது .இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.191 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 10.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஹஸ்ரத்துல்லா ஷஷாய், முகம்மது ஷாஷத் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை ஆப்கானிஸ்தானுக்கு பெற்றுக் கொடுத்தனர்.ஹஸ்ரத்துல்லா ஷஷாய் 30 பந்துகளில் 44 ஓட்டங்கள்,குர்பாஸ் 46 ஓட்டங்கள், அதிரடியாக ஆடிய நஜிபுல்லா 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்களை குவித்தார்.

ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோர்ஜ் முன்சே , கெலே கோய்ட்ஷர் களமிறங்கினார்கள்.முஜிபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் கோய்ட்ஷர் ஆட்டமிழந்தார்.

காலும் மேக்லியோட், ரிசி பெரிங்டான், மேத்யூ க்ராஸ், மைக்கல் லீஸ்க் ஓட்டங்கள் ஏதுமின்றி பூச்சியத்தோடு மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். தொடக்க வீரரான ஜோர்ஜ் முன்சே மாத்திரம் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். முஜிபுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும், ரஷித்கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...