ஐ.சி .சி இருபதுக்கு இருபது தொடரின் சூப்பர் 12 சுற்றின் குழு 2 இன் போட்டியாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
135 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.ஆரம்பத்தில் சொதப்பிய பாகிஸ்தான் அணிக்கு ஆசிப் அலியின் அதிரடியான ஆட்டம் வலு சேர்த்தது.போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹரீஸ் ரொவ்ப் தெரிவானார்.
கடந்த மாதம் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் பாதுகாப்பின்மையென தொடரை கைவிட்டு நாடு திரும்பியது.அதனையடுத்து மனதளவில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நியூசிலாந்தை வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர இலக்கு இருந்ததை பாகிஸ்தான் வீரர்களுடைய சமூக வலைத்தள பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.எனவே அறை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி 75% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.