ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.152 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை இலகுவாக அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அணியின் தலைவர் பாபர் அசாம் 68 ஓட்டங்களையும், அணியின் விக்கெட் காப்பாளர் முஹம்மத் ரிஸ்வான் 79 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்கள்.போட்டியின் நாயகனாக அதிரடி பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிடம் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தானின் வரலாற்றை பாபர் படை மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.