ஐ.சி சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் அனைத்து போட்டிகளும் ஆரம்பிப்பதற்கு முன்னர் மைதானத்தில் மண்டியிட்டும் , வேறு முறைகளிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
கடந்த மேற்கந்தியதீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.எனினும் மண்டியிட மறுத்த டீ கொக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
இவை கடந்த சில தினங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று அதற்கு கொக் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.
இன்றைய தினம் இலங்கை அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் குயின்டன் டீ கொக் சக வீரர்களுடன் இணைந்து நிற வெறிக்கு எதிராக முழந்தாளிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.